சார்லட்டில் பொங்கல் விழா!

அன்புடையீர்,

சார்லட் நகர தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

தமிழ்ச் சங்கத்தின் சார்பாக ஜனவரி மாதம் 27ஆம் தேதி, சனிக்கிழமை, அன்று காலை 10.30 மணி முதல், பொங்கலை கொண்டாடும்வண்ணம், சார்லட் மற்றும் சுற்றுப்பகுதிகளிலுள்ள தமிழ் பேசும் மக்கள் சந்தித்து ஒன்றுக்கூடி கழிக்க, களிக்க, ஏற்பாடு செய்துள்ளோம். மேலும், உள்ளூர் திறமைசாலிகளைக் கொண்டு பலவித கலை நிகழ்ச்சிகள் நடத்தவிருக்கிறோம். அனைவரும் வருகைதந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சிறப்பான உணவு, உடை, வளையல் கடைகள், போட்டோ ஸ்டூடியோ, போட்டிகளும் உண்டு. முழுநேரமும் உணவு கிடைக்கும். கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு பணமாகவோ, காசோலையாகவோ கொண்டுவரவும், கடன் அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இடம்: Hickory Ridge High School, 7321 Raging Ridge Rd, Harrisburg, NC 28075

நன்றி,
சார்லட் நகர தமிழ்ச் சங்கம்.

 

 

நிகழ்ச்சி/போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்கள்.

Program enrollment form

Fashion show sign up form

Masters of ceremony sign up form

Other volunteers sign up form

Kolam competition form

Cooking & Baking competition forms